Saturday, December 10, 2011இலங்கை:இரண்டு வழிகளில் தீர்வுத் திட்ட முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளை,; பாராளுன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக சகல கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதான தரப்பினர் பொதுவான ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் அந்தத் தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பிப்பது இலகுவானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் உள்ளடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் இடை நடுவில் உறுப்பினர்களை இணைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment