Saturday, December 24, 2011இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று (23.12.2011) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான பசீர் ஷேகுதாவூத், விநாயக மூர்த்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரிய நேந்திரன், சி.யோகேஸ்பரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.
No comments:
Post a Comment