Saturday, December 24, 2011புளோரிடா : உலகிலேயே மூத்த யோகா ஆசிரியர் என்ற சாதனையை 91 வயது பெர்னிஸ் பேட்ஸ் என்ற மூதாட்டி படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் வசிப்பவர் பெர்னிஸ் பேட்ஸ். இப்போது 91 வயது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு டிவியில் யோகா நிகழ்ச்சியை பார்த்து, அதை கற்றுக் கொண்டார். அதன்பின், மற்றவர்களுக்கு யோகா கற்றுத்தர தொடங்கினார். யோகாவின் பெரும்பாலான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறார் பெர்னிஸ். இவரை விட வயதில் இளையவர்களால் கூட, இவர் செய்யும் யோகாசனங்களை செய்ய முடிவதில்லை.
இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. Ôஉலகிலேயே மிக வயதான யோகா ஆசிரியர்Õ என்ற பெருமையை பெர்னிஸ் பெற்றுள்ளார். ÔÔயோகா செய்யும் போது என் தசைகள் தளர்த்தி அடைகின்றன. உடல் வளைந்து கொடுக்கும் சக்தியை பெருகிறதுÕÕ என்கிறார் பெர்னிஸ். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ÔÔபேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுவதால் முதியவர்கள் பலர் இறக்கின்றனர். வயதானவர்களுக்கு முதுகில் கூன் விழுந்து இடுப்பு பகுதி சக்தியற்று போய்விடும். யோகா செய்வதால் உடல் சமநிலை பெருகிறது. அதன்மூலம் கீழே விழாமல் சரியாக நிற்கவும் நடக்கவும் முடிகிறது. இடுப்பு எலும்பு வலுப்படும்போது அவர்களால் நேராக நிற்க முடியும்ÕÕ என்கின்றனர்.
No comments:
Post a Comment