Saturday, December 24, 2011

திருட்டு கும்பல் சிக்கியது ரூ1 கோடி மதிப்புள்ள கார்கள், நகை பறிமுதல்!

Saturday, December 24, 2011
கரூர் : கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 17 கார்களை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 4.89 லட்சம் ரொக்கம், 30 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் போலீசார் கரூர்-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பெரியார் ஆர்ச் அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த ஒரு ஜீப்பை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டபோது காரில் இருந்தவர்கள் தங்களிடம் ஆவணம் இல்லை என்றனர். விசாரணையில் அவர்கள் அந்த ஜீப்பை கரூரில் ஒரு ஓட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்தபோது திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த சுரேஷ் (37), மணி என்கிற ராஜாமணி (34), சசிகுமார் (20) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் பசுபதிபாளையம் போலீசார் நடத்திய வாகன சோதனையிலும் கார் திருடும் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பாபுலால் என்கிற ஜாபர் (24), ராமகிருஷ்ணன் (35), சாகுல்அமீது (34) என்பதும், இவர்கள் அனில்குமார், ராஜாமணி, சசிகுமார் ஆகியோருடன் சேர்ந்து கார் திருடுவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 17 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி. இதில் 8 கார் கரூரிலும், மதுரை, திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில 9 கார்களையும் அவர்கள் திருடியிருந்தனர். அவர்களிடம் இருந்த 4 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகைகள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment