Saturday, December 24, 2011

பேராசிரியர் தகுதி தேர்வை சீர்குலைக்க சதி? பச்சையப்பன் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Saturday, December 24, 2011
கீழ்பாக்கம் : பச்சையப்பன் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று நடைபெற்ற பேராசிரியர் தகுதி தேர்வை சீர்குலைக்க சதி நடந்ததாக தெரிகிறது. இதுசம்பந்தமாக பம்மலில் உள்ள பூத் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அறைக்கு நேற்று மாலை போன் அழைப்பு வந்தது. கல்லூரி முதல்வர் கந்தசாமியின் உதவியாளர் ராஜேஸ்வரி எடுத்து பேசினார். மறுமுனையில் பேசியவர், Ôஉங்கள் காலேஜில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை வெடிக்கும். வெடிக்காவிட்டால் கல்லூரி வளாகத்தில் ஆசிட்டுகளை கொண்டு வந்து ஊற்றுவோம்Õ என கூறிவிட்டு கட் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்தில் முதல்வர் கந்தசாமி புகார் கொடுத்தார்.

கீழ்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் பவானீஸ்வரி உத்தரவின்படி, உதவி கமிஷனர் ராஜாராமன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் நேற்றிரவு கல்லூரிக்கு வந்து சோதனை போட்டனர். தொடர்ந்து இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் வந்தனர். கல்லூரி வளாகம் முழுவதும் சோதனை போட்டனர். மோப்ப நாய் Ôஆனந்த்Õ, கல்லூரி வளாகத்தை சுற்றி வந்து ஓரிடத்தில் படுத்து கொண்டது. வெடிகுண்டு புரளி என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொலைபேசியில் பேசிய நபர் யார் என்று விசாரணை நடத்தினர். சென்னை அருகே பம்மலில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து மர்ம நபர் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அந்த பூத்துக்கு விரைந்தனர். கடை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர். மர்ம நபரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கிடையில், பச்சையப்பன் கல்லூரியில் சென்னை பல்கலைக்கழக மானிய குழு சார்பில், பேராசிரியர் பதவிக்கு தகுதி தேர்வு இன்று நடந்து வருகிறது. காலை, மாலையும் சேர்த்து 3 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கு வந்தவர்களை போலீசார் தீவிரமாக சோதித்து அனுப்பினர்.

No comments:

Post a Comment