Saturday, December 24, 2011

சம்மாந்துறையில் மாணவி கொலை சந்தேகம்!

Saturday, December 24, 2011
இலங்கை::சம்மாந்துறை, மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றிலிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment