Saturday, December 24, 2011

அம்பாறையில் பெய்து வரும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில்!

Saturday, December 24, 2011
இலங்கை::அம்பாறையில் பெய்து வரும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

ஒலுவில் துறைமுக வெளிச்சவீடு வரை கொந்தளிக்கும் கடல்நீர் வந்து போகிறது. சாலைகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் போக்குவரத்தும் பெருமசிரமத்துக்கு உள்ளாகிறது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 48 மணிநேரத்தில் 245.8 மில்லிமீற்றர்மழை – பல குடும்பங்கள் இடம்பெயர்வு!

ன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 245.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்துவருகின்றது.

இக்காலப்பகுதியில் 245.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதானநிலைய பொறுப்பதிகாரி கே.சிவதாஸ்தெரிவித்தார்.

நேற்று காலை முதல் இன்று காலை (24.12.2011) வரை 178.3 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அரை மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை மழை வீழ்ச்சி கணக்கிடப்பட்டு வானிலை அவதான நிலையத்தின் கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடும்மழை காரணமாக புதிய காத்தான்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, செங்கலடி, கிரான் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது வெள்ளம் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். பலவீதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளன.இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

படுவான்கரைபிரதேசமெங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment