Saturday, December 24, 2011

கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் - நடிகர் ஜீவா அதிரடி!

Saturday, December 24, 2011
சென்னை: புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவை நடத்துபவர்கள் புலிகளை போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள (புலி)தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டதாக ஜீவா அறிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனவே எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன்," என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment