Saturday, December 24, 2011இலங்கை::கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதை விட முக்கியமான வேலைகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கின்றன. முதலில் அந்தக் கடமைகளை முடித்துவிட்டு அவர்கள் இதனை ஆராயட்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதி நிதி கலாநிதி பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா. சபை ஆராய்கிறதா? முழுமையான ஆராய்வுக்குப் பின்னர் அது பற்றி இலங்கை அரசுடன் பேசுவதற்கு எதுவும் அவர்கள் தரப்பிலிருந்து சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளதா என செய்தியாளர்களில் ஒருவர் கேட்ட போதே அவர் மேற் கண்டவாறு பதிலளித்தார்
வடகொரியாவில் ஒரு தலைவர் இறந்திருக்கிறார். அந்தத் தீபகற்பம் குறித்து பார்க்க வேண்டும். ஈரான் அணுவாயுதப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. அதுபற்றி ஆராயப்பட வேண்டும். ஐரோப்பாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாலுள்ள பிரச்சினைகள் இவைதான். இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு பற்றி அவர்கள் அவசரப்பட வேண்டிய தேவையில்லை. ஆறுதலாக ஆராய்ந்து கூறுவார்கள். நீங்களும் அவசரப்படாதீர்கள் என பாலித கொஹோன கூறியுள்ளார்.
No comments:
Post a Comment