Saturday, December 3, 2011

கிரேரு வெளியேறியமை கட்சியின் பௌத்த அடித்தளத்திற்கு பேரிழப்பு - ஐக்கிய பிக்குகள் முன்னணி!

Saturday, December 03, 2011
ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டு மொஹன் லால் கிரேரு வெளியேறியமை கட்சியின் பௌத்த அடித்தளத்திற்கு பேரிழப்பாகும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி குறிப்பிடுகின்றது.

கட்சியின் பௌத்த கொள்கைக்காக கிரேரு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியில் எவ்வித சிறப்புச் சலுகையோ அல்லது அனுகூலங்களையோ எதிர்பார்த்து, மொஹன் லால் கிரேரு இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மீதான அதிருப்தியினாலேயே அவர் கட்சியை விட்டு வெளியேறியதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment