Saturday, December 03, 2011தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது.
இது தவிர இந்த மாதத்தில் மேலும் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே இந்த வருடத்துடன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளாக இவை அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணைவது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தெரிவுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாது என, அதன் தலைவர் இரா.சம்பந்தன், வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும் இன்றைய பேச்சுவார்த்தை நிறைவடையும் வரையில் எதனையும் கூற முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன்,செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 6ஆம் 15ஆம் 17ஆம் திகதிகளிலும், அரசாங்கத்துடனான சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment