Saturday, December 3, 2011

பதிவு செய்யப்படாத தொலைபேசி வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - அனூஷ பெல்பிட்ட!


Saturday, December 03, 2011
நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் 60 வீதமானவை பதிவு செய்யப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசி வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.

தொலைத்தொடர்புகள் சட்டத்திற்கு அமைய அனைத்து தொலைபேசி விற்பனை நிலையங்களும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை 20 வீதத்தால் குறைந்துள்ளது.

3 comments: