Saturday, December 3, 2011

புலிச் சந்தேக நபர்கள் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயற்சி செய்த சம்பவம் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது-லங்காதீப ஆசிரியர் தலையங்கத்தில்!

Saturday, December 03, 2011
புலிச் சந்தேக நபர்கள் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயற்சி செய்த சம்பவம் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது என லங்காதீப ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளிகள் செய்மதி தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லிடப் பேசிகளின் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களுக்கு அதி நவீன தொடர்பாடல் சாதனங்கள் கிடைக்கப் பெற்றமை ஆராயப்பட வேண்டியது அவசியம் என்று லங்காதீப ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இவ்வாறு அதி நவீன சாதனங்கள் சந்தேக நபர்களின் கைகளுக்கு கிடைத்திருக்காது. எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செல்லிடப்பேசிகள் எவ்வாறு கைதிகளின் கைகளுக்கு சென்றது என்பது ஆராயப்பட வேண்டியது அவசியமானது. சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இந்தவிடயங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றும் லங்காதீப சந்தேகம் வெளியிட்டுள்ளது.

புலி சந்தேக நபர்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என்று லங்காதீப தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான தவறுகள் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்று வருவதாகவும் இது ஒரு ஆபத்தான நிலை எனவும் செய்திதாளின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment