Saturday, December 3, 2011

தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ரூ.5 கோடியில் அடிப்படை வசதிகள்!

Saturday, December 03, 2011
சென்னை : தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஸீ5 கோடி செலவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு, வெயில் மற்றும் மழை காலங்களில் சிரமமின்றி செல்ல வசதியாக, அம்மா மண்டபத்தில் இருந்து கோயில் வரை ரூ.1 கோடி செலவில் சாலை ஓரத்தில் மேற்கூரை அமைக்கப்படும்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ரூ.45 லட்சம் செலவில் ஓய்வறை, பொருட்கள் வைப்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை கட்டப்படும்.

முத்துப்பேட்டை ஜாம்புவானோ டை தர்காவில் ரூ.25 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகளும், சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் ஸ்ரீசவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ரூ.56 லட்சம் செலவில் ஓய்வு மண்டபம், குளியலறை, கழிப்பறைகளும் கட்டப்படும்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள பகவான் ரமண மகரிஷி இல்லத்தில் ரூ.50 லட்சத்திலும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருத்தங்கல் நாராயண பெருமாள் கோயிலில் ரூ.40 லட்சத்திலும் ஓய்வு அறை, குளியலறை, குடிநீர் வசதி செய்து தரப்படும். திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயிலுக்கு ரூ.43 லட்சத்து 60 ஆயிரம் செலவில் ஓய்வு அறை, பொருட்கள் வைப்பறை, கழிப்பறை கட்டித் தரப்படும்.

திருநெல்வேவி மாவட்டம் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.25 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதியும் அரியலு£ர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் அடைக்கல மாதா ஆலயத்துக்கு ரூ.44 லட்சம் செலவில் ஓய்வு அறை, குடிநீர் வசதி, குளியலறை, கான்கிரீட் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கழிமுகத்துவாரம் அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ரூ.34 லட்சம் செலவில் ஓய்வு அறை, படகுகள் நிறுத்துமிடம் கட்டுதல், புதிய படகுகள் வாங்குதல், உயிர்காப்பு சாதனங்கள் வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment