Saturday, December 3, 2011

புலிகளின் முன்னாள் ஆயுதங்கள் கொள்வனரான கே.பியை கைது செய்ய சென்னை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது-ஜயலத் ஜயவர்த்தன!

Saturday, December 03, 2011
புலிகளின் முன்னாள் ஆயுதங்கள் கொள்வனரான கே.பியை கைது செய்ய சென்னை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது-ஜயலத் ஜயவர்த்தன!

புலிகளின் முன்னாள் ஆயுதங்கள் கொள்வனரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய சென்னை நீதிமன்றம் இன்டர்போலிடம் பிடியாணை பிறப்பித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள், வெடிபொருட்கள் பயன்படுத்தியமை மற்றும் பயங்கரவாதம் தொடர்பாகவே கே.பியை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றம் இன்டர்போலிடம் பிடியாணை பிறப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிடியாணையின் பிரதியொன்றையும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அண்மையில் சென்னைக்கு சென்றிருந்தபோது, இலங்கை அரசாங்கத்தின் காவலில் கே.பி இருப்பது குறித்து சென்னை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தான் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பிடியாணையில் கே.பியின் பெயர் தர்மலிங்கம் சண்முகம் குமரன் எனவும் அவரின் பிறப்பிடம் யாழ்ப்பாணம் காதங்கேசன்துறை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது எப்போது என பாராளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment