Saturday, December 3, 2011

தமிழக அரசு 1006 ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்துள்ளது:இதற்காக இலவச திருமணம் ஜோடிகளை தேடி அலையும் அறநிலையத்துறை ஊழியர்கள்!

Saturday, December 03, 2011
நெல்லை :தமிழக அரசு 1006 ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் திருமணம் ஆகாத இளைஞர், இளம்பெண்களை தேர்வு செய்ய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச திருமணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தபகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் ‘முதல் திருமணம்‘ என்பதற்கான சான்றிதழ் பெற்று ஆய்வாளர்களிடம் வழங்க வேண்டும். பின்னர் இணை ஆணையர் மூலம் விண்ணப்பங்கள் அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள அரசு அறிவித்தது.

ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக அரசின் இலவச திருமண திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் இலவச திருமணத்தை நடத்த 1006 ஜோடிகளை தேட அறநிலையத்துறை பணியாளர்களை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன்படி அறநிலையத்துறை பணியாளர்கள் தினமும் காலை முதல் மாலைவரை ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலைகின்றனர்.

No comments:

Post a Comment