Saturday, December 03, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரண்டாம் இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பொன்சேகாவிற்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் வாக்குமூல பிரதிகள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஹைகோப் வழக்கு மற்றும் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்பதை உறுதி செய்வதற்காக பிரதிவாதி தரப்பினால் நான்கு பேரின் சாட்சியங்கள் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஒரே மாதிரியான இரண்டு வழக்குகள் இரண்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுவது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு முரணானது என்று பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment