Tuesday, December 13, 2011

கூடை சட்டத்துக்கு எதிர்ப்பு!

Tuesday, December 13, 2011
இலங்கை::மரக்கறி மற்றும் பழங்களை விநியோகம் செய்யும் போது, பிளாஸ்ட்டிக் கூடைகளை பயன்படுத்த வேண்டும் என புதிய சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக கந்தபளை பிரதேசத்தின் வர்த்தகர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதேவேளை புதிய சட்டத்துக்கு எதிராக, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்தனர்.

மெனிங் சந்தை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பதுளை - பண்டாரவளை நகரிலும் இந்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன் தம்புல்லை பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை விநியோகிக்கும் விவசாயிகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இவ்வாறான போராட்டம் ஒன்று நாராயன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை விநியோகிக்கும் விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களின் விநியோக நடவடிக்கைகளின் போது, பிளாஸ்ட்டிக் கூடைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தில் மாற்றம் இல்லை என நுகர்வோர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், லேண்ட் மாஸ்ட்டர் ட்ரெக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மரக்கறிகளை கொண்டு செல்லும் போது, பிளாஸ்ட்டிக் கூடை தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜொன்ஸ்ட்ரன் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment