Tuesday, December 13, 2011இலங்கை::வலுவான எதிர்கட்சி ஒன்றை நாட்டில் உருவாக்கி மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான நோக்கம் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய மல்வத்து பீட மகாநாயக்க தேரரை இன்று (13) சந்தித்து ஆசி பெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு ஒருவரையும் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.
கட்சிக்குள் ஒற்றுமையை கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் யாரையும் நீக்குதல், ஒதுக்கி வைத்தல் கட்சியின் நோக்கம் அல்ல எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
No comments:
Post a Comment