Tuesday, December 13, 2011புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி ஒரு தம்பதியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும், பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள குற்றப்பிரிவு போலீசார், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ க்கு வேவு பார்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து, பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், சட்டவிரோதமாக நேபாள எல்லை வழியாக இருவரும், இந்தியாவுக்குள் வந்ததாக கூறினர். மேலும், ஐ.எஸ்ஐ உத்தரவின் பேரில் உத்தரபிரதேசத்திற்கு செல்ல இருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment