Tuesday, December 13, 2011

மாத்தறை வெலிகம பெலன பகுதியில் போலி கச்சேரி முற்றுகை!

Tuesday, December 13, 2011
இலங்கை::மாத்தறை வெலிகம பெலன பகுதியில் இயங்கி வந்த போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையமொன்று மாத்தறை ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

போலியாக தயாரிக்கப்பட்ட 15 அரச நிறுவனங்களின் முத்திரைகள் சுமார் 500 சான்றிதழ்கள் இதன்போது கைப்பற்றப்பட்டாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு நேற்று கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் உடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மாத்தறையில் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment