Tuesday, December 13, 2011

மெட்ரோரயில் பணிகளுக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Tuesday, December 13, 2011
சென்னை : சென்னையில் மெட்ரோரயில் பணிகள் நடந்து வருவதால் வரும் 15ம் தேதி முதல் அண்ணாநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முகப்பேரிலிருந்து அண்ணாநகர் செல்வோர் 100 அடி சாலையில் இடதுபுறம் திரும்பவேண்டும் என்றும் பாடியிலிருந்து கோயம்பேடு செல்வோர் 18வது சாலையில் திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து பாடி செல்ல போக்குவரத்தில் எந்தவிதமாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் திருமங்கலம் சந்திப்பிலிருந்து 100 அடி சாலை வரை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் சிந்தாமணி முதல் அண்ணாநகர் ரவுண்டான வரை ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment