Tuesday, December 13, 2011

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் நாடு கடத்தல் உத்தரவினை ஆஸீ நீதிமன்றம் இடைநிறுத்தம்!

Tuesday, December 13, 2011
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் நாட கடத்தல் த்தவினை அவுஸ்திரேலிய நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கைத் தமிழர் ஒருவரை, தற்போதைக்கு நாடு கடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளரை நாடு கடத்தக் கூடாது என அவுஸ்திரேலியாவின் பேர்த் புகலிடக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரை நாடு கடத்தினால் ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், நாடு கடத்தல் உத்தரவினை இடை நிறுத்தியுள்ளது.

இதேவேளை, மற்றுமொரு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் இன்றைய தினம் நாடு கடத்தப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நபர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தப் புகலிடக் கோரிக்கையாளர் மற்றுமொரு மேன்முறையீட்டை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவரையில் ஒருவர் மட்டுமே பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment