Tuesday, December 13, 2011சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக , பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மையக் கருத்தைக் கொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.
நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அப்துல்கலாம் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment