Tuesday, December 13, 2011இலங்கை:அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கீரியும் பாம்பும் போன்று செயற்படுவதாலும் அதேநேரம் இருதரப்பும் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதாலும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டுவிட முடியாது எனத் தெரிவித்த ஐ.த.க. எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன, ஆணைக்குழுக்களை அமைத்து நேரத்தை வீணடிப்பதை விடுத்து இந்தியாவுடன் இணைந்து தீர்வைக்காண முன்வர வேண்டும் என்றும் நேற்று சபையில் ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கடற்றொழில் நீர் வழங்கல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 30 வருட காலமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தமை தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருந்தது. இதில் அமைச்சர் ஒருவரது பங்கும் இருந்தது. எனினும் இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கண்டிருப்பதையிட்டு அமைச்சருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனினும் வடக்கு, கிழக்கின் கடல் வளம் அங்குள்ள மக்களுக்கு மாத்திரம் சொந்தமானது என்று இங்கு கூறுவதற்கு நான் விளையவில்லை.
இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை தந்திரோபாயத்தின் மூலம் தீர்த்துவிட முடியாது. பொதுவாக மீனவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதால் இலங்கை இந்திய கத்தோலிக்க மதகுரு தலைவர்களுடன் கலந்தாலோசனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு இவற்றுக்கு தீர்வைக் காண முடியும். இதேபோன்று கச்சதீவு பிரச்சினைக்கும் நல்லதொரு தீர்வை எட்ட முடியும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment