Tuesday, December 13, 2011

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்கோர்ட்டில் (புலி)வைகோ ஆஜர்!

Tuesday, December 13, 2011
சென்னை : இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று (புலி)வைகோ ஆஜரானார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், "ஈழத்தில் நடப்பது என்ன?' என்கிற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், ம.தி.மு.க., பொதுச் செயலர் (புலி)வைகோ கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது என,(புலி) வைகோவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வைகோ கைது செய்யப்பட்டார்.

மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, (புலி)வைகோ நேரில் ஆஜரானார். கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தால், வழக்கறிஞர்கள் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு நீதிபதி பாண்டுரங்கன் தள்ளிவைத்தார்.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த (புலி)வைகோ, நிருபர்களிடம் கூறும்போது, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த, கேரள அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறோம். பேச்சுவார்த்தையை தமிழக அரசு புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது. பொருளாதார தடை ஏற்படுத்த வேண்டும். வரும் 21ம் தேதி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 13 சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment