Tuesday, December 13, 2011

ஹைகோப் வழக்கின் அடிப்படை ஆட்சேபனை தொடர்பான தீர்ப்பு ஜனவரி 20 ஆம் திகதி!

Tuesday, December 13, 2011
இலங்கை:ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஹய்க் கோப் நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச வழக்கின் அடிப்படை எதிர்ப்பு தொடர்பான வாதத்தை நிறைவு செய்துள்ளார்.

பிரதிவாதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஹய்க் கோப் வழக்கு விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சட்டத்தில் அதிகாரம் உள்ளதாக சட்டமா அதிபர் வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இரண்டாவது இராணுவ நீதிமன்றம் பிரதிவாதிக்கு 30 கால சிறைத்தண்டனையை வழங்கியுள்ளதன் காரணமாக வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல சட்டத்தில் இடம் இல்லை என சரத் பொன்சேகாவின் சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தரப்பினரதும் கருத்துக்களை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment