Tuesday, December 13, 2011

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!

Tuesday, December 13, 2011
இலங்கை:ஆட்கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐந்து பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

கெடமான்ன பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் குற்றமிழைத்திருப்பதாக வழக்கின் தீர்ப்பை அறிவித்தபோது, மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரசேன ராஜபக்ஸ
தெரிவித்தார்.

முறைப்பாடு செய்த பிரிவினர் சமர்ப்பித்த சாட்சிகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதென நீதிபதி குறிப்பிட்டார்.

1996 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அந்த ஆட்கொலை இடம்பெற்றுள்ளது.

வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

கெடமான்ன பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment