Tuesday, December 13, 2011

20 நாளில் ரூ.43 லட்சத்துக்கு தொலைபேசி பேச்சு:மோசடி ஆசாமியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்!

Tuesday, December 13, 2011
மும்பை : 20 நாட்களில் ரூ.43 லட்ச ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசிய மோசடி ஆசாமியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ரிஷிகேஷ் சுக்லா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் வயர்லெஸ் தொலைபேசி இணைப்பை பெற்றார். எஸ்.டி.டி. மற்றும் ஐ.எஸ்.டி. வசதியை கேட்டு பெற்றார். நவம்பர் மாதம் 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை 20 நாட்களில் ^42,52,480க்கு வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். இதற்கான பில் கட்டணத்தையும் அவர் செலுத்தவில்லை.

இடைவிடாமல் அவரது தொலைபேசி எண்ணில் இருந்து வெளிநாடுகளுக்கு பேசி இருப்பதை பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் ரிஷிகேஷ் சுக்லா கொடுத்த பட்லாபூர் என்ற இடத்தில் உள்ள முகவரிக்கு சென்று பார்த்தபோது அது போலி முகவரி என்று தெரிந்தது. பிஎஸ்என்எல் அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி கல்யாண் பகுதியில் கோல்சேவடி என்ற இடத்தில் வசித்து வந்த ரிஷிகேஷ் சுக்லாவை கைது செய்தனர். அவர் மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வெளிநாடுகளில் அவர் யாருக்கு, எதற்காக ^43 லட்சத்துக்கு தொலைபேசியில் பேசினார் என்பது குறித்து போலீசாரும் பிஎஸ்என்எல் அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். போதுமான ஆவணங்கள் இல்லாமல் சுக்லாவுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொலைபேசி இணைப்பு அளித்திருப்பது வியப்பளிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment