Sunday, December 25, 2011

கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

Sunday, December 25, 2011
சென்னை : கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சென்னையில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு பிறந்த தினமான இன்று, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் ஜெப வழிபாடு செய்தனர். 12 மணி ஆனதும் தேவாலயங்களில் கேக் வெட்டி அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவ பாடல்களை பாடி இயேசு கிறிஸ்துவை வரவேற்றனர். சாந்தோம் தேவலாயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கேற்ற பேராயர் சின்னப்பா அங்கு கூடி இருந்த கிறிஸ்தவர்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
இதே போல¢, பழமையான லஸ் தேவலாயத்தில் பங்குதந்தை ராயண்ணா தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், அடையாறு இயேசு அன்பர் சர்ச், நுங்கம்பாக்கம் தெரசா மாதா ஆலயம், எழும்பூர் அந்தோணியார் சர்ச், திருஇருதய ஆலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், கே.கே.நகர் மத்தியாஸ் சர்ச், நெற்குன்றம் இம்மானுவேல் தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை புனித தேமையார் ஆலயம் உள்ளிட்ட பல கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

No comments:

Post a Comment