Sunday, December 25, 2011

ரயில் நிலையங்களில் தொலைத்தொடர்பாடல் நிலையங்கள்!

Sunday, December 25, 2011
இலங்கை::அனைத்து பிரதான ரயில் நிலையங்ளிலும் தொலைத்தொடர்பாடல் நிலையமொன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்தாபிக்கப்படவுள்ள தொலைத்தொடர்பாடல் நிலையத்தின் மூலம் எந்தவொரு பட்டியலுக்குமான கட்டணத்தை செலுத்தும் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சேவை நிலையங்கள் ஊடாக தொலைபேசி, இணையத்தள தொடர்பாடல் சேவைகள், தபால், பிரதியாக்கம் உள்ளிட்ட நவீன அத்தியாவசிய தொலைத்தொடர்பாடல் வசதிகளை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கிறார்.

அத்துடன் தொலைபேசி, மின்சாரம், உள்ளிட்ட ஏனைய பட்டியல்களுக்கான கட்டணங்கள் இந்த தொலைத்தொடர்பாடல் நிலையங்களின் ஊடாக செலுத்தக்கூடிய வசதிகளை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment