Sunday, December 25, 2011திருவானந்தபுரம்: சுற்றுலா விசா காலாவதியாகியும் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவானந்தபுரம் கோவலம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே குறித்த இலங்கை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய மொஹமட் ஹசிம் என்பவர் கடந்த மே மாதம் 22ம் திகதி இலங்கையில் இருந்து சென்னைக்குச் சென்றுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா கடந்த ஜூன் 9ம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.
குறித்த இலங்கையர் கடந்த வியாழக்கிழமை சென்னையில் இருந்து திருவானந்தபுரம் - கோவலம் சென்று தன்னை புனே நபர் என அறிமுகப்படுத்தி ஹோட்டலில் தங்க முயற்சித்துள்ளார்.
இவருடைய போலியான இந்த தகவல் குறித்து ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் குறித்த இலங்கையரை நேற்று கைது செய்துள்ளளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையிடம் இருந்து ஒரு மடிக்கணினி கைப்பற்றப்பட்டதோடு பொலிஸார் அதனை பரிசோதனைக்கென அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கையரான ஹசிமிடம் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment