Sunday, December 25, 2011இலங்கை::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், தமது கட்சிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஈ.பீ.டி.பீ. மறுத்துள்ளது.
தமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அந்த அறிக்கையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கெதிராக எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஈ.பி.டி.பியின் தலைவரும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் உட்பட பல விடயங்களை எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபோதிலும் அதில் ஈ.பி.டி.பிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நான் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
வடபகுதியில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்களில் ஈ.பி.டி.பிக்கு தொடர்புள்ளதாக அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக்கருத்து எமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனாலேயே நாம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment