Sunday, December 25, 2011சென்னை : உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அதிமுக நிர்வாகிகள் பலர், கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதையடுத்து கட்சி பொறுப்புகளில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை:
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.எஸ்.சந்திரசேகரன், தலைமை நிலைய பேச்சாளர் கோவி.எஸ்.மோக னன், வாலாஜாபேட்டை ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன். வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செய லாளர் கே.சிட்டிபாபு, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.சி.சரவணன், சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆனந்தன்,
வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம் ஜோலார்பேட்டை நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சி.எஸ்.பெரியார்தாசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் டி.கிருஷ்ணன், தண்டாரம்பட்டு ஒன்றிய செயலாளர் டி.ஜானகிராமன், தண்டாரம்பட்டு ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தங்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தரடாபட்டு ஊராட்சி செயலாளர் ஏ.ஆர்.நடராஜன், துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் ஏ.கே.அரங்கநாதன் எம்எல்ஏ, ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.என்.கிட்டுசாமி எம்எல்ஏ, மாவட்ட வக்கீல் அணி செயலாளர் எஸ்.செல்வக்குமார சின்னையன், கொடுமுடி ஒன்றிய செயலாளர் புதூர் பி.கலைமணி, கோவை மாநகர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் கவுண்டம்பாளையம் தொகுதி இணைச் செயலாளருமான எஸ்.விஜயன், நாகை மாவட்ட எம்.ஜி. ஆர் இளைஞரணி செய லாளர் ஜி.முருகானந்தம், கீழ்வேளூர் ஒன்றிய இளைஞர் பாசறை பொருளாளர் வி.சுரேஷ், புதுக் கோட்டை கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் மா.சொக்கலிங்கம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் சிறுமருதூர் கிளைச் செயலாளர் மு.ராஜநாயம் எம்.எல்.ஏ. ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் கடலாடி ஒன்றிய செயலாளர் ஆர்.பத்மநாபன், கமுதி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏ.மணிமுத்து, நெல்லை புறநகர் தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் கே.முருகையாபாண்டியன், ஆலங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபுத்திரன், கடையம் ஒன்றிய செயலாளர் என்.ஜீவா என்ற அருணாசலம் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment