Sunday, December 25, 2011இலங்கை::மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் சடலம் சவுக்கடியில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலமீன்மடு வாவிக் கரையில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக நேற்று சனிக்கிழமை காலை மூவர் இயந்திரப் படகில் சென்றுள்ளனர். சுமார் 100 மீற்றருக்கு அப்பால் வாவியும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக படகு கவிழ்ந்ததில் மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
கடலில் மூழ்கிய மூவரில் இன்பம் என்பவர் பாதுகாப்பு அங்கி அணிந்து சென்றமையால் தெய்வாதீனமாக நீந்திக் கரைசேர்ந்து உயிர்தப்பினார். அ.பாக்கியராசா (வயது-55), சிறி (வயது-35) ஆகிய இருவரும் காணாமல் போன நிலையில் இன்று, சிறி என்பவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றையவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை. கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்களை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் அதனையும் மீறி இவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment