Monday, December 05, 2011மட்டக்களப்பு வாகரை பகுதியில் கதிரவெளி பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்திய நீர் தாங்கி ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத் தரப்பினர் மீட்டுள்ளனர்.
இவ்வெடிபொருட்கள் இன்று காலை 7 மணியளவில் மீட்கப்பட்டதாக வாகரை பொலிஸார் குறிப்பிட்டனர்.
60 மில்லி மீற்றர் வர்க்க மோட்டார் ரவைகள் 60, அதற்கு பயன்படுத்தப்படும் பியூஸ் 29, ஆர்.ஜி.பி ரவைகள் 2, ஆர்.ஜி.பி சார்ஜர் 6 மற்றும் புலிகள் இயக்க சீருடைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment