Monday, December 5, 2011

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் வந்து இணையும் நிலை தொடரும்-தினேஷ் குனவர்தன!

Monday, December 05, 2011
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் வந்து இனணந்தவண்ணமேயுள்ளனர். இந்த நிலமையானது இன்னும் தொடருமென ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குனவர்தன தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தில் தமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் முன்னெடுக்கப்பட உள்ள அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளரர் மா நாடு இன்று அரசாங்க தகவல் திணைக்ளத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வரவு செலவுத்திட்டத்தை விட இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நீர்வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இதனைப்பயன்படுத்தி புதியபல வேலைத்திட்டங்களுடன் மக்களுக்கு சேவையினை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment