Sunday, December 25, 2011இலங்கை::இனப்பிரச்சினை தீர்வை இழுத்தடிப்பதுதான் இன்று ஒரு சிலரது தேவையாக உள்ளது. இந்நிலையில் கட்சி பேதமின்றி அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு
அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் காங் கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்விற்கான பின்னடை விலிருந்து மீள்வதற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட தற்கான தீர்வை யுத்தம் முடிந்து இரண்டு வருடத்திற்கும் அதிகமாகியும் அரசாங்கத் தினால் தமிழ் மக்களுக்கான தீர்வு இன் னும் கிடைக்கவில்லை.
எனினும், இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பல தடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டும், அது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது என பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
1980களில் புலிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டில் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களை அழித்ததன் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள். இருப்பினும் அவர்களது இராணுவ பலத்தை ஏற்று தமிழ்மக்களும் அவர்களுக்கு பின் அணிதிரண்டார்கள். இறுதி கட்ட யுத்தத்தில் அவர்களது தோல்வி தமிழ் மக்களுக்கு பாரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் 13வது திருத்த சட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. அதேநேரம் 13வது திருத்த சட் டத்திற்கு அப்பால் தீர்வினை வழங்குவதற்கு சிங்கள அரசாங்கங்கள் முன்வந்திருந்தன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு அவர்களின் ஆலோ சனையின் படி பேச்சுவார்த்தை மேடைக்கு சென்றிருந்தால் இன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு எமக்கு சார்பாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையின்மையினால் எமது தமிழ்ச் சமூகத்தை பின்நோக்கி தள்ளிவிடக் கூடாது. அரசியல் அனுபவம் மிக்கவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் மாத்திரம் எவ்வித பிரயோசனமும் இல்லை எனவும் இனப்பிரச்சினை தீர்வின் மூலமாகவே முழுமையான அபிவிருத்தியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment