அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பிற்குமிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை: நம்பிக்கையின்மை/விட்டுக்கொடுக்காமை போலியாக நடைபெற்றுவரும் பேச்சு தொடருமா? தொடராதா?
Sunday, December 25, 2011இலங்கை::அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பிற்குமிடையே நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை எந்தவிதமான நம்பிக்கையோ அல்லது விட்டுக் கொடுப்போ இல்லாத ஒருவிதமான வேண்டா வெறுப்பாக, ஏனோ தானோ என்று இடம்பெற்று வருவது குறித்து நாட்டிலுள்ள புத்திஜீவிகள் பலரும் கவலை தெரிவித்து தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் (புலி)கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதனால் எந்தவிதமான பிரயோசனமும் கிடையாது. அது, இது என்று கேட்டு ஒரு ஆரம்பக் கட்டத்தையே எட்ட முடியாத வர்களாக கூட்டமைப்பு பிரதிநிதிகள் தடுமாறுகின்றனர். இவர்கள் காலத்தை வெறுமனே கடத்தி வருவதுடன் நடத்த முடியாத வற்றை நடத்துமாறு கேட்டு அரசாங்கத்தின் மீது பழியைச் சுமத்த முயல்வ தாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதேபோன்றே அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தமிழ்க்
கூட்டமைப்பினர் இன்னமும் புலிகளின் பாணியிலேயே செயற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி யிருக்கிறார். ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என அவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளதுடன், தமிழ்க் கூட்டமைப்பினருக்கு உண்மையிலேயே இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வம் உள்ளதா எனத் தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை அண்மையில் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்தித்துரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு எனக் காரமாகத் தெரிவித்திருந்தார். புலிகளைப் போலவே ஏற்றுக் கொள்ள முடியாதவற்றைக் கேட் பதும், கொடுத்துவிட்டால் தொடர்ந்து வேறொன்றைக் கேட்பதுமாக காலத்தைக் கடத்தித் தமது பொறுமையைச் சோதிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் காணி, பொலிஸ் அதிகாரம் எதுவும் வழங்கப்படமாட்டாது. அதைவிட்டு ஆக்கபூர்வமாகப் பேசி அடுத்தக்கட்டத்தை எட்ட முயற்சிக்க வேண்டும் என அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் கெஹலிய தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தமிழ் (புலி)கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் எம்.பி ஆகியோர் தமது நிலைப்பாடு குறித்து அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பேச்சுவார்த்தை மூலமே தீர்வினைக் காண வேண்டும். அதற்காகவே பொறுமை யுடன் செற்படுகிறோம் என ஆர். சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
எம்மை பயமுறுத்தி அடிபணியவைத்து எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது என்று மாவை சேனாதி ராஜா தெரிவித்திருக்கிறார்.
காணி, பொலிஸ் அதிகாரம் இல்லாத பேச்சு தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. அதில் அர்த்தமும் இல்லை, ஏற்கவும் மாட்டோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்பேச்சுவார்த்தை தொடருமா? தொடராதா? எனும் சந்தேகம் மக்கள் மற்றும் புத்தி ஜீவிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதேவேளை பேச்சுவார்த்தை முறிந்தால் அல்லது கைவிடப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இதனால் பாதிக்கப்படப் போவது யார்? நிச்சயம் தமிழ் மக்களே என்பதுவும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

முன்னர் புலிகள் பேச்சை முறித்துக் கொண்டதும் யுத்தத்திற்குச் சென்றார்கள். அரசு தனது படைகளை வைத்து யுத்தம் நடத்தி வெற்றிகண்டது. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? எனவே சாவல்களை விடாது விட்டுக் கொடுப்புக்களுடன் பேச்சைத் தொடர்ந்து விரைவாக ஒரு தீர்வினைக் காண முன்வர வேண்டும் எனவும் புத்திஜீவிகள் அழைப்பு விடுக்கின்றனர். இல்லையெனில் அரசாங்கம் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும், தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ்ப் புத்திஜீவி களுடன் பேச்சு நடத்தி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு நியாயமான தீர்வை முன் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே கருத வேண்டும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment