Sunday, December 25, 2011

நண்பன் பட பாடல் வெளியீடு கோவையில் கோலாகல விழா!

Sunday, December 25, 2011
கோவை: கோவை பீளமேடு இந்துஸ்தான் கல்லூரியில், இயக்குநர் ஷங்கர் இயக்கிய, நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்த நண்பன் திரைப்பட பாடல் இசை வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், என் சித்தப்பா துரைராஜின் நீண்ட கால நண்பராக சிவாஜி இருந்தார். அவர் கோவைக்கு அடிக்கடி வருவார். நான் 4 வயதில் அவர் மடியில் அமர்ந்திருந்தேன். அந்த பாக்கியத்தால் நான் நடிகராகி இருக்கிறேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்தபோது அருகே நான் படித்த சபர்பன் பள்ளியை காட்டினேன். இதை கேட்ட சிவாஜி பள்ளிக்கு போய் வந்தேன் என சொல் என்றார். விஜய் படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்தை தருகிறது என்றார்.
நடிகர் பிரபு பேசுகையில், கோவையில் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பது இனிமையான விஷயம். தினமும் 10 வீட்டில் இருந்தாவது சாப்பாடு வந்து விடும். கோவையை சேர்ந்த சத்யராஜ், சினிமாவிற்கு கஷ்டப்பட்டு வந்தார். பைக்கில் வந்து வாய்ப்பு தேடி கொண்டிருந்தார். நிறைய ஹீரோக்களிடம் வில்லனாக நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் படத்தில் அவர் என்னம்மா கண்ணு என வசனம் பேசி பிரபலம் அடைந்தார். கமல் படத்தில் தகடு, தகடு என வசனம் பேசி, ரசிகர்களை கவர்ந்தார். சிவாஜிக்கு பிறகு தமிழை சரியாக உச்சரிக்க தெரிந்தவர் சத்யராஜ் என்றார்.
நடிகர் விஜய் பேசுகையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க எனக்கு நீண்ட நாள் ஆசை. அவர் ஏற்கனவே இயக்கிய முதல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். அவரை போன்ற ஒரு டைரக்டரை இதற்கு முன்பு பார்த்ததில்லை. இயக்குநர் ஷங்கர் நடித்து காட்டும் விதம் புதுமையானது. அவர் இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் போல் காணப்படுகிறார். அவர் பழகும் விதம், கற்று தரும் விதம் அற்புதமானது. நடிகர் ஜீவா நண்பன் படப்பிடிப்பில் கலகலப்பாக நடந்து கொண்டார். அவர் செய்த கலாட்டாவினால் சீரியசான காட்சிகளில் கூட சிரிப்பை காட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டது. நண்பன் படம் மூலம் நான், ஜீவா, ஸ்ரீகாந்த் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம்.
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மெலோடியாக உள்ளது. நடிகர் சத்யராஜை வித்தியாசமான கேரக்டரில் இந்த படத்தில் பார்க்கலாம். டைக்டர் எஸ்ஜே சூர்யாவும் இந்த படத்தில் நான் கேட்டு கொண்டதற்கிணங்க நடித்துள்ளார்Õ என்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், Ô3 இடியட்ஸ் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியதை அறிந்ததும், நான் அந்த நிறுவனத்தை அணுகி வாய்ப்பு கேட்டேன். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்திருந்தேன். என் எதிர்பார்ப்புபடி வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவிக்கிறேன்Õ என்றார்.
இயக்குநர் ஷங்கர் பேசுகையில், எந்திரன் படப்பிடிப்பு புனேவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒருநாள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இந்நிலையில், டென்ஷனாக இருந்தபோது 3 இடியட்ஸ் படத்திற்கு சென்றேன். சில நிமிட நேரம் என்னால் படத்தின் காட்சிகளை கவனிக்க முடியவில்லை. எந்திரன் படப்பிடிப்பு தொடர்பாக சிந்தனை அலை பாய்ந்தது. சிறிது நேரத்தில் படம் என்னை ஈர்த்தது. படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது. படம் முடிந்ததும் எனக்கு தெளிவு வந்தது. அந்த படத்தை தமிழில் இயக்க விரும்பினேன். ரஜினிக்கு பிறகு நேரம் தவறாமை உள்ளவர் விஜய். இவர் படத்திற்கான காட்சிகளை வீட்டில் நடித்து பார்த்து தயார் செய்து விட்டு வருவார். நண்பன் படத்திற்கு பிறகு, விஜய்யை பிடிக்காமல் யாராவது இருந்தால் கூட அவர்களுக்கும் விஜய்யை மிகவும் பிடித்து போகும். எந்திரன் படத்தை மனதில் வைத்து கொண்டு நண்பன் படத்தை பார்க்க கூடாது. அந்த படம் வேறு விதமானது. கிராபிக்ஸ், தொழில்நுட்பம் என அந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படம் வேறு விதமான அனுபவம் தரும். ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு கதையை தேடுகிறார்கள். இதை விட்டு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கதையை வாங்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றார். 3டி முறையில் நண்பன் பட பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது. இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் வெளியிட, நடிகர் பிரபு பெற்று கொண்டார். குறுந்தகடு வெளியீட்டை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு 3டி கண்ணாடி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment