Sunday, December 04, 2011லக்பிம நியூஸ் பத்திரிகையின் ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ராஜ்பால் அபேநாயக்க மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜ்பால் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் வருடாந்தம் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சரத் என் சில்வா பிரதம நீதியரசராக கடயைமாற்றிய காலத்தில் அவருக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்த சட்டத்தரணிகள் தற்போது அவருக்காக குரல்கொடுத்து வருவதாக ராஜ்பால் தெரிவித்ததாகவும், அதனை அடுத்து சட்டத்தரணி தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தரணி தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக ராஜ்பால் குறிப்பிட்டுள்ளர்h.
No comments:
Post a Comment