Sunday, December 04, 2011பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் எனக் கூறப்படும் நேவி ரூபா என்ற ருவான் சந்திமால் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். தனது கணவர், தம்மிக்க என்ற அவரது நண்பருடன் கடத்திச் செல்லப்பட்டுளளதாக தனக்கு அறியகிடைத்தாக அவரது மனைவி இன்று அதிகாலை 2 மணியளவில் வரக்காபொல காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வரக்காபொல காவற்துறையினர், ருவான் என்பவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், கடத்தப்பட்டவர் நேவி ருவான் என்பவரா என்பது பற்றி தமக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நேவி ருவான் அண்மையில், விடுதலை பெற்றதுடன், கடந்த மூன்று மாத காலமாக வரக்காபொல பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இவர் பல அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகியவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன...
கடத்தல் சம்பவம் குறித்து நேவி ருவனின் மனைவியான லக்க்ஷிகா வாரக்காபொல பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். 252-5369 என்ற இலக்கம் கொண்ட வெள்ளை வானிலேயே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment