Sunday, December 4, 2011

மின் உற்பத்தி மேலும் தாமதமாகும் கூடங்குளம் போராட்டத்தால் Ï. 2 ஆயிரம் கோடி இழப்பு!

Sunday, December 04, 2011
வள்ளியூர் : கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால் இதுவரை Ï.2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்உற்பத்தி தொடங்கவும் காலதாமதமாகும்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் 3ம் கட்டமாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் 48வது நாளாக நேற்று தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 55 நாட்களுக்கு மேலாக கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி ஆயத்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதற்காக பணியில் அமர்த்தப்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் 96 பேர், மத்திய அரசு ஊழியர்கள் 800 பேர் உள்ளிட்ட 6 ஆயிரம் பேர் வேலைக்கு செல்லவில்லை. தற்போது அங்கு பராமரிப்பு பணிகளான யுரேனியம் எரிபொருள் பாதுகாப்பு, அணுமின் நிலையத்திலிருந்து பணியாளர்கள் குடியிருப்பான அணுவிஜய்நகரியத்துக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் சுத்திகரிப்பு, முதல் அணுஉலை வெப்பநீர் சோதனை ஓட்டம் பராமரிப்பு, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் கட்டுப்பாட்டு அறை பணிகள் ஆகிய பணிகளுக்கு சுமார் 90 பேர் மட்டும் அணுமின் நிலைய வேலைக்கு செல்கின்றனர்.

மின்உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெறாததால் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இதுவரை சுமார் Ï 2 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு மாத சம்பளமே பல லட்சத்தை தாண்டும். அவர்கள் இப்போது பணிக்கு செல்லாதபோதும் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் அணுமின்நிலையத்தில் கடல்நீரை உள்ளிழுக்கும் கருவிகளான ‘‘கெய்சான்‘‘, ‘‘டைக்‘‘ ஆகியவை கடலுக்குள் பராமரிப்பின்றி இருப்பதால் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளன. உப்பு காற்றால் அணுமின் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் துருப்பிடித்து விட்டன. டிசம்பரில் அணுமின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போராட்டத்தால் தற்போது மார்ச்சில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்போதும் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்காததால் மின்உற்பத்திக்கு இன்னும் 3 மாதங்கள் காலதாமதமாகும்.

இந்த தாமதம் ஜனவரி வரை நீடித்தால் மின்உற்பத்தி தொடங்க 9 மாதங்களாகிவிடும். அதாவது ஒவ்வொரு மாத காலதாமதத்திற்கும் மின்உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் கூடுதலாக எடுக்கும். இதனால் மின்உற்பத்தியால் மத்திய அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.அணுமின்உற்பத்தி தாமதமாவதால் பராமரிப்பு பணிகளுக்கே, திட்ட மதிப்பீடான Ï 13 ஆயிரம் கோடியாகி விடும். எனவே பல்வேறு உத்திகளால் அணுஉலையை வரவிடாமல் செய்து விட வேண்டும் என்ற போராட் டக்கு ழுவினரின் உள்நோக்கத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கக் கூடாது என்று கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment