Monday, December 5, 2011

நாடாளுமன்றத்திற்கு வரும் முன்னாள் புலி போராளிகள்!

Monday, December 05, 2011
புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதன்பொருட்டு, எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக சுமார் 43 முன்னாள் புலிகள் அழைத்துவரப்படவுள்ளனர்.

இந்த தகவலை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பின் நிதியொதுக்கீடு தொடர்பிலான குழு நிலை விவாதம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டே இந்த 43 பேரும் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் வரப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த 43 பேரும் எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment