Thursday,December,08,2011இலங்கை:உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அவசரமாக வெளியிட வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் வேண்டுமென்றே தமதப்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையை அவசர அவசரமாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் ஜனாதிபதி இந்த அறி;க்கையை பாராளுமன்றில் சமர்ப்பிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்கா ஐந்து ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதியடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மாத ஆரம்பத்தில் அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
No comments:
Post a Comment