Thursday, December 8, 2011

ப.சிதம்பரம் ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Thursday,December,08,2011
புதுடெல்லி : உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் இறங்கியதால் மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. 2ஜி விவகாரத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி சிபிஐ கோர்ட்டில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சுப்பிரமணிய சாமியை சாட்சியாக விசாரிக்க டெல்லி ஐகோர்ட் இன்று அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மக்களவையில் பா.ஜ. மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது. இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். இதே பிரச்னையால் மாநிலங்க ளவையும் ஒத்திவைக் கப்பட்டது. நாடாளுமன்றம் கடந்த 22ம் தேதி கூடியது. விலைவாசி உயர்வு, கருப்பு பணம், தெலங்கானா போன்ற பிரச்னைகளில் தொடர்ந்து முடக்கப்பட்டது. கடந்த வாரம் அன்னிய முதலீடு பிரச்னையால் முடங்கியது. அன்னிய முதலீடு முடிவை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதன் முறையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமைதியாக நடந்தன. இந்நிலையில் சிதம்பரம் பிரச்னையால், இன்று மக்களவை முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment