Friday, December 9, 2011

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது!

Friday, December 09, 2011
இலங்கை:அவுஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்த பிரதிநிதிகள் இலங்கை சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா வம்வக்கிநேவ் தலைமையிலான இந்த பிரதிநிதிகள், சபாநயாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் கண்டி தலதா மாளிகைக்கும் விஜயம் செய்ய உள்ளமுடன், யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்திற்கும் செல்லவுள்ளனர்.

No comments:

Post a Comment