Wednesday, December 28, 2011

புதிய தலைமை செயலக உட்கட்டமைப்பு பணிகளை நிறுத்தக்கோரி வழக்கு!

Wednesday,December,28,2011
சென்னை : புதிய தலைமை செயலகத்தின் உட்கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வீரமணி இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். தலைமை செயலகத்தை தலைமை மருத்துவமனையாக மாற்றுவது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடைப்பெற்றுவருவதாகவும்
ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமை செயலகத்தை கட்டிமுடிக்க இதுவரை ரூ.551 கோடி செலவாகியுள்ளதாகவும், ஏற்கனவே 1 கி.மீ தூரத்தில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் எனவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக விடுமுறை கால நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment