Wednesday,December,28,2011இலங்கை::கொழும்பு-கல்கிஸ்ஸை ஜனதா மாவத்தையில் வைத்து தலா 40 கிராம் ஹெரோயின் அடங்கிய இரு பைக்கற்றுக்களுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை 27 வயதுடைய இளைஞன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கஸ்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவதியொருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது!
அங்கும்புர, மானவில பிரதேசத்தில் 22 வயதான யுவதியொருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட யுவதி மீட்கப்பட்டுள்ளதோடு, அவரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அங்கும்புர, கெப்பெடிபொல வீதியில் நேற்று முற்பகல் 8.15 அளவில், வீதியால் பயணித்துக்கொண்டிருந்த குறித்த யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அங்கும்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment