Sunday, December 11, 2011இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முழு அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிழையான அபிப்பிராயங்கள் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் முழுமையான அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுவேலி கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆணைக்குழு அறிக்கையின் கண்காணிப்புக்களும், பரிந்துரைகளும் மட்டுமே முதலில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முழு அறிக்கையும் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
21ம் திகதிக்கு முன்னதாக அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment